நான் தான் உங்களுக்கு சமைச்சு போடுவேன்.. ஓகேவா? க்யூட்டான நடிகை நிவேதா தாமஸ் இப்படி யார் கிட்ட சொன்னார் தெரியுமா?

தர்பார் இசை வெளியீட்டு விழா மேடையில் ரஜினியிடம், உங்கள் வீட்டிற்கு வந்தால் நான்தான் சமைப்பேன் ஓகேவா என கேட்டதற்கு ரஜினி கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.நான்தான் சமைச்சு போடுவேன்

ரஜினி – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.ஸ்பெஷல் வீடியோ

நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, அனிருத், சந்தோஷ் சிவன், ராகவா லாரன்ஸ், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக தர்பார் படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸும் பேசினார். அப்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பதாக கூறினார். மேலும் இந்தப்படத்தில் நடிப்பேன் என நான் கனவில் கூட நினைக்கவில்லை.கனவில் கூட நினைக்கவில்லை

Loading...

பல இடங்களில் ஷுட்டிங் நடைபெற்றது. ஆனால் ஒரு காட்சியில் கூட ரஜினி சார் முகம் சுளிக்கவில்லை. அவ்வளவு எனர்ஜி அவருக்கு. ஆண்டவன் சொல்றான் ஆதித்ய அருணாச்சலம் முடிக்கிறான், அதுதான் இனிமே டயலாக் என்ற அவர் மேலும் தொடர்ந்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ரஜினிகாந்தை பார்த்து “சார் நீங்கள் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு என்னை அழைத்துள்ளீர்கள், நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் நான்தான் உங்களுக்கு சமைச்சு போடுவேன் ஓகே வா” என்று கேட்டார்.தம்ப்ஸ் அப்

அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே தம்ப்ஸ்அப் செய்து ஓகே என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர்.

Loading...