அழகு சீரியலை திடீரென அதிகமாக ரசித்து என்ஜாய் செய்யும் ரசிகர்கள்! காரணம் இந்த பெண் தான்.. நீங்களே பாருங்க

சன் டிவியின் அழகு சீரியலுக்கு அழகு சேர்ப்பது போல கடந்த சில வாரங்களாக இடைவெளி இல்லாமல் நடிகை ரேவதி அழகம்மையாக சீரியலில் தலை காண்பித்து வருவது சீரியல் ஆர்வலர்களை திருப்தி படுத்தி வருகிறது.

அழகு சீரியலின் ஸ்டார் காஸ்ட் நடிகை ரேவதி. இவருக்காக இந்த சீரியலை பார்த்த ஆண்களும், பெண்களும் ஏராளம்.  ஆவணப்படம் விளம்பரம்

இவருக்கு இளம் வயதில் ஆரம்பித்த ரசிகர்கள் இன்று வரை இவரது ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

தெரிந்தோ தெரியாமலோ அழகு சீரியலுக்கு இவரை நடிக்க வைத்துவிட்ட தயாரிப்பாளர்கள், நடுவில் இவரது கால்ஷீட் கிடைக்காமல் திண்டாடித்தான் போய்விட்டார்கள்.

Loading...

வயதானாலும் தனி அழகில் மிளிரும் நடிகை ரேவதி, நடிப்பிலும் தனி பாணியில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர்.

ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் வசீகர குரலால் மனம் கவரும்படி பேசி அனைவரையும் கவர்ந்து விடுவார். அழகு சீரியலில் அழகம்மையாக நடிக்கும் இவர் சிறிது காலம் சீரியலில் தலை காட்டவில்லை.தனி அழகு

ரேவதி எப்போதும் சும்மா இருக்க மாட்டார். விளம்பரம் குறும்படம், ஆவணப்படம் என்று பிசியாக இருப்பார். அது போல, அழகு சீரியலில் நடிக்கும்போதும் பிரேக் எடுத்துக் கொண்டு விளம்பர படம், குறும்படம் என்று நடிக்கப் போய்விட்டு வந்தாரோ என்னவோ, இவரை காணாமல் ரசிகர்கள் தவித்துதான் போய்விட்டனர்.

ரேவதியின் பெண் குழந்தை யாத்ரா என்கிற பெயரில் வளர்ந்து வருகிறது. அது தனது பெற்றோர் தனக்கு கொடுத்த பரிசு என்று கூறி இருக்கிறார் ரேவதி.

ஒருவேளை இந்த பெண் குழந்தையுடன் நாட்களை செலவிட சென்று இப்போது மீண்டும் அழகு சீரியல் ஷூட்டிங் திரும்பி இருக்கிறாரோ என்னவோ என்றும் பேச்சு அடிபடுகிறது.மஞ்சள் காட்டு மைனா

இந்த சீரியலில் நடிக்கும் மஞ்சள் காட்டு மைனா காயத்ரி ஜெயராமும் அழகு சீரியலுக்கு மெருகூட்டி இருக்கிறார். ரேவதி, காயத்ரி ஜெயராம் இருவரும் இந்த சீரியலின் ஸ்டார் காஸ்ட் என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் இல்லை என்றால் இந்த 6:30 மணி நேர ஸ்லாட் சீரியல் இவ்வளவு சூடு பிடிக்காது என்பதுதான் உண்மை.

Loading...