நீல கலர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுபமா! ப்பா என்னா அழகு என ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் நடித்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவர் புடவை கட்டிக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட அனுபமா, தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் நடித்து அறிமுகமானார். இந்நிலையில் தமிழ் படமொன்றில் நடித்து வருகிறார் அனுபமா.

நானி, நிவேதா தாமஸ் நடித்த நின்னு கோரி என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

இந்நிலையில் நீல நிற புடவையில் தான் இருக்கும் புகைப்படங்களை அனுபமா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Loading...

இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் எல்லா உடையிலும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Loading...