பிரியங்கா ரெட்டியை கொன்ற அரக்கர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்! நடிகை நயன்தாராவின் அதிரடி அறிக்கை

கடந்த மாதம் 27-ஆம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்

இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக தெலங்கானா காவல்துறை நேற்று தெரிவித்தது

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நயன்தாரா, தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.

நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை என குறிப்பிட்டுள்ளார்

Loading...
Loading...