பிக்பாஸ் கவின் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்… வருத்தப்படும் ரசிகர்கள்

டாக்டர் படத்தில் இருந்து கவின் நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு படக்குழு கொடுத்துள்ள விளக்கம் வளைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தை கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.

இந்த படத்தில் தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க யோகி பாபு, வினய் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.Image result for கவின் டாக்டர் படம்

மேலும் இப்படத்தில் கவினும் கனா பட தர்ஷனும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.

Loading...

ஆனால் நேற்று நடந்த இப்படத்தின் பூஜையில் கவின் கலந்து கொள்ளவில்லை.இதனால் கவின் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தகவல் பரவியது.

ஆனால் படக்குழு தரப்பில் விசாரிக்கையில் இப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாக பரவிய தகவலே வெறும் வதந்தி தான். அப்படியிருக்க அவரை எப்படி இந்த படத்தில் இருந்து நீக்க முடியும் என கூறியுள்ளார்.

கவின் நடிக்கவில்லை என படக்குழு கூறியிருப்பது கவின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...