என் மனைவி மாற்றுத்திறனாளி! வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டம்.. வடிவேலுவுடன் சேர்ந்து பலபடங்களில் சிரிக்க வைத்த போண்டா மணி உருக்கம்

ஈழத்தமிழரான பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழில் வடிவேலு, சந்தானம் போன்ற பிரபல நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளவர் நடிகர் போண்டா மணி.

இலங்கையை சேர்ந்த இவர் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை கடந்து தான் தற்போது நல்ல நிலையில் உள்ளார்.

போண்டா மணி அளித்துள்ள பேட்டியில், என் தந்தை இலங்கையில் மளிகை கடை நடத்தினார்.

Loading...

எங்கள் குடும்பத்துல மொத்தம் 16 பிள்ளைகள். அதில், ஒருவர் குண்டடி பட்டு இறந்துட்டார்.

என்னை ஒருமுறை சுட்டதில் என் இடது காலில் குண்டு துளைத்தது. பிறகு, சிங்கப்பூர் சென்று அங்குள்ள கடையில் வேலை செய்தேன்.

அங்கே பிரபல இயக்குனர் பாக்யராஜ் சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அவரிடம் வாய்ப்பு கேட்டேன்.

ஆனால் சினிமாவில் நடிப்பது எளிது கிடையாது, சென்னை வந்துவிடு என என்னிடம் கூறினார்.

பின்னர் தமிழகத்துக்கு நான் வந்தபோது மீண்டும் பாக்யராஜை சந்தித்து பேசினேன், இலங்கையில் இருந்து வந்த கதையை சொன்னேன், பின்னர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

இதையடுத்து பட வாய்ப்பு தேடி கொண்டே சென்னையில் வாட்ச்மேனாகவும் வேலை பார்த்தேன்.

பின்னர் வடிவேலுடன் அதிக படத்தில் நடித்தேன். கருணாநிதி, ஜெயலலிதா என இருவரும் எனக்கு நன்மை செய்துள்ளனர்.

கருணாநிதி என்னை ஊக்கப்படுத்தினார். ஜெயலலிதா கட்சியின் உறுப்பினராக்கினார்.

இதுவரை எனக்கு எந்தவிதமான குடியிருப்புச் சான்றோ, வாக்காளர் அட்டையோ, வீடோ கிடைக்கவில்லை, எனது மனைவி மாதவி மாற்றுத்திறனாளி ஆவார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என கூறியுள்ளார்.

Loading...