பிக்பாஸுல் நான் அப்பா ஆயிட்டேன் என கத்தி பிரபலமான சென்றாயன் சினிமாவில் நல்ல ரோல்களை எதிர்பார்ப்பதால் இயக்குனர்கள் அவருக்கு அதற்கு உதவ வேண்டும்.

சென்ராயன் என்றால் நம்நினைவுக்கு வருவது பிக்பாஸ் சீசன்-2ல், நான் அப்பாவாயிட்டேனு கத்திக்கிட்டு ஓடுனதுதான் .

ஆரம்ப காலத்தில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சென்ராயன் பொல்லாதவன் படத்தில் மூலம் ஓரளவுக்கு முகம் பதித்து அறிமுகமானார். மேலும் வாசுகி படத்தில் அவர், இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், வில்லன் கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்து இருப்பார்.Related image

சென்ராயனுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது மூடர் கூட்டம் இந்த படத்துல அவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் தான் அவர் முதல் முறையாக முழுநீல கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இதை அடுத்து சென்ராயனுக்கு பல படங்கள் புக் ஆகி படு பிசியாகிவிட்டார். மலையாளம், தெலுங்கில் நாயகி படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது, இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் டாக்ஸி தல என்ற கதாபாத்திரத்தில் சென்ராயன் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்தின் போஸ்டல் வெளியிடப்பட்டது. இதில் சென்ராயன், ஜெர்கின், தலையில் குல்லா என செம டெரராக காட்சி அளிக்கிறார். மூடர் கூட்டம் படத்தைப்போல இப் படமும் சென்ராயனுக்கு நல்ல பெயரைத் தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Image result for sendrayan
யோகிபாபுவுக்கு இப்போது ஹீரோ ரேஞ்சுக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அதே போல சென்ராயனும் நல்ல ரோல் கிடைத்தால் கலக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் மனசு வைக்க வேண்டும்.

மலையாளத் திரையுலகில் இதுபோன்ற நல்ல நடிப்புத் திறன் கொண்ட நடிகர்களை சிறப்பான ரோலில் நடிக்க வைப்பார்கள். அதேபோல தமிழ் சினிமாவும் மாறுமா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.