90ஸ் கிட்ஸ்க்கு பேவரைட்டான சீரியல்களில் மை டியர் பூதமும் ஒன்று.

கதையின் ஹீரோ பெயர் மூசா. மக்களுக்கு எதாவது பிரச்னை என்றால் `மூசா வா` என்று சொன்னால் உடனே வந்து உதவி பண்ணும் மூசா இப்போது எஞ்சினியரிங் முடித்துவிட்டு சினிமா துறையில் பயணித்து கொண்டிருக்கிறார்.

“465” என்ற படத்திற்கு எக்சிக்யூடிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். `தோனி கபடி குழு` படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இப்போது, ஆரி நடிக்கும் `நாகேஷ் திரையரங்கம்` படத்தில் ப்ரொடக்‌ஷன் கன்ட்ரோலராகவும் கூடவே படத்தில் முக்கியமான ரோலிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவருடைய இயற்பெயர் அபிலாஷ் என்பதாகும். மை டியர் பூதம் சீரியலில் இவருடன் நடித்த மற்ற குழந்தைகளான பரத்பாலு, கௌதம்,நிவேதா தாமஸ், ஹரிதா ஆகியோர் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்க.