தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பெரும் என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். பாடகி சின்மயி கூறி இருந்த குற்றச்சாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு “வீழ மாட்டோம்” ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.Image result for chinmayi wedding vairamuthu

இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் பாடகி சின்மயி கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மை இருக்கிறதா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே பாடகி சின்மயி, வைரமுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளது தான். 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் சின்மயி,வைரமுத்துவுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

படங்களில் ஒன்றாக பணியாற்றுவது தொழில் ரீதியாக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பாடகி சின்மயிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற போது கவிஞர் வைரமுத்துவும் சென்றிருந்தார். அந்த திருமணத்தில் வைரமுத்துவின் காலில்விழந்து ஆசியும் பெற்றார் சின்மயி.

இதனால் சின்மயி, வைரமுத்து குறித்து இப்படி பாலியல் புகாரை சொல்லி வருவது மிகவும் ஆதாரமற்றது என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், சின்மயி, வைரமுத்து குறித்து பாலியல் புகார் கூறி ஒரு வருடம் ஆன நிலையில் இதுவரை அதற்கான எந்த ஒரு ஆணித்தனமான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

இப்படி சினமயி மற்றும் வைரமுத்து விஷயத்தில் பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், சமீபத்தில் சினமயி, வைரமுத்து மற்றும் ஏ ஆர் ரகுமான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் வைரமுத்துவை ஒருவர் ‘ஐ லவ் யூ’ என்று கூற, அதனை படித்து காண்பிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். உடனே, வைரமுத்து, அது ஆணா ? இல்லை பெண்ணா? பாருங்க அப்புறம் வயசை கேட்டுக்கலாம் என்று சொன்னதும் இருவரும் சிரித்து விடுகின்றனர்.

பின்னர் ஏ ஆர் ரஹ்மான், வைரமுத்துவிடம் ‘நீங்க பேசுவது எல்லாம் போகிறது உலகம் புல்லா’ என்று சொன்னதும் வைரமுத்து ‘போகிறதா’ என்று கூறுகிறார்.

இந்த வீடீயோவை சின்மயி, வைரமுத்துவின் உண்மை முகத்தை வெளிக்காட்டவே பகிர்ந்துள்ளார் என்று அவர் நினைத்துக்கொண்டுள்ளாரோ என்னவோ. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள்.