90களில் தமிழ் சினிமாவை கலக்கிய கவர்ச்சி நடிகையான விசித்ரா, பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி தொடர் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தலைவாசல் படத்தில் அறிமுகமான விசித்ரா, தேவர் மகன், ரசிகன், வீரா, முத்து என பல படங்களில் நடித்துள்ளார், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

கடைசியாக 2002ம் ஆண்டு இரவு பாடகன் படத்தில் நடித்தவர், திருமணமாகி செட்டில் ஆனார்.

இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் மைசூரில் வசித்து வந்த விசித்ரா, தற்போது சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மறுபடியும் நடிக்க ஆசைப்பட்டவுடன் என் கணவர் சம்மதம் தெரிவித்தார்.

ஒருகாலத்தில் எனக்காக சினிமாவை விட்டு வந்தவள் நீ, மறுபடியும் நடி, அதனால் தவறில்லை என கூறி பச்சைக் கொடி காட்டினார்.

மூன்று பிள்ளைகளுடன் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது, என் பிள்ளைகளுக்க நான் நடிகை என்பதே தெரியாது.

இப்போது தினமும் என்னை திரையில் பார்த்து ரசிக்கிறார்கள், சீரியலில் என்னை யாராவது திட்டினால் அவர்களுக்கு பிடிக்காது, அந்த அளவுக்கு என் மேல் பாசம் அதிகம்.

நான் ஷீட்டிங் வந்துவிட்ட நாட்களில் என் கணவர்தான் பொறுப்பாக அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.