இன்றைக்கு பல சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பினாலும், மெகா தொடர் என்றாலே அது சன் டிவி தான் என்பதையும் நாம் மறுக்க முடியாததாகும்.

பொழுது போகாமல் இருந்த பெண்களை, தொலைக்காட்சி முன்பு உட்கார வைத்த பெருமை சன் தொலைக்காட்சியையே சாரும். பல விதமான களங்களில் வித்தியாசமான சீரியல்கள் பலவற்றை படைத்து, ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்திய சன் டிவி தற்போது ‘ராசாத்தி’ என்ற மெகா தொடரையும் ஒளிபரப்பி வருகிறது.

இதில் பவானி ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில், அதாவது ராசாத்தியாக நடிக்கிறார். வயதாகி விட்டாலும், நடிப்பில் எப்போதுமே இளமையைப் பின்பற்றும் விஜயக்குமாரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் இதற்கு முன்பு சன் டிவி-யின் தங்கம், வம்சம், நந்தினி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் செந்தில், நடிகை விசித்ரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

தற்போது இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகை தேவயானி இடம்பெற்றிருக்கும் அந்த ப்ரோமோவில், “நான் செளந்தரவல்லி, சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு. ராசாத்தி, எங்க ஜமீனுக்கு வரப் போற கெளரவம்.

அவள சிந்தாமணி (விசித்ரா) கிட்ட இருந்து எப்படி மீட்கணும்ன்னு எனக்குத் தெரியும். சிந்தாமணிக்கு சிம்ம சொப்பனமா, ராசாத்திக்கு ஒரு விடிவு காலமா இனி நா வரப் போறேன்” என்கிறார்.

இன்னொரு ப்ரோமோவில், “உங்கள் சன் டிவியில் ’கோலங்களுக்கு’ அப்புறமா ராசாத்தி சீரியல்ல ஒரு முக்கியமான கதாபாத்திரமா நான் வரப்போறேன். மிஸ் பண்ணாம பாருங்க” என்கிறார்