நடிகரும், சூப்பர் மாடலுமான மிலிந்த் சோமன் தனது காதலி அங்கிதாவை திருமணம் செய்து கொண்டார்

நடிகரும், சூப்பர் மாடலுமான மிலிந்த் சோமன்(52) விமான பணிப்பெண்ணான அஸ்ஸாமை சேர்ந்த அங்கிதா கொன்வரை(26) பார்த்ததும் காதல் வயப்பட்டார்.

அன்று முதல் இன்று வரை முதல் பார்வை போலவே காதல் மலர்கின்றது. கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

மிலிந்த் சோமன், அங்கிதாவின் திருமணம் மும்பை அலிபாக் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மிலிந்த் சோமனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக அவர் பிரான்ஸை சேர்ந்த நடிகை மைலீனை 2006ம் ஆண்டு திருமணம் செய்து 2009ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

மகள் வயது பெண்ணை மிலிந்த் திருமணம் செய்துள்ளார் என்று மக்கள் பேசுவதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு பிடிக்கும் விஷயத்தை நான் செய்கிறேன் என்கிறார் மிலிந்த் சோமன்.

தற்போது மனைவியுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என கூறியுள்ளார்.