தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை சஞ்சனா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். சஞ்சனா அடிக்கடி பப்பிற்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத் மாதாபூரில் உள்ள ஒரு பப்பிற்கு சென்றுள்ளார். அங்கு இளைஞர்கள் பலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அந்த இளைஞர்களில் ஒருவர் சஞ்சனாவின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞன் தெலுங்கான மாநில முன்னாள் எம்எல்ஏ., நந்தீஸ்வர் கவுடு மகன் ஆஷிஷ் என்பது தெரியவந்தது. அவர் மீது சஞ்சனா மாதாபூர் போலீசில் புகார் செய்தார்.

ஆஷிஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவரிடம் இருந்த தான் தப்பி வந்ததாகவும், அவரால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் மனுவில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆஷிஷை தேடி வருகிறார்கள்.