விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய தொடர்களில் பகல் நிலவு சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் அசீம் – ஷிவானி, அர்ஜூன் – சிநேகா என்ற முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த சீரியல் முடிந்த பிறகு, மீண்டும் அசீம் – ஷிவானியின் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது.

கடைக்குட்டி சிங்கம் சீரியலில் முன்னணி கதாபாத்திரமாக இடம் பெற்றார் ஷிவானி. ஆனால் என்ன காரணமோ, சீரியல் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, அதிலிருந்து வெளியேறினார். தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இரட்டை ரோஜா’ என்ற சீரியலில், அனு, அபி என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் ஷிவானி.

பார்ப்பதற்கு வட இந்திய பெண் போன்று இருக்கும் இவரின் சொந்த ஊர் சாத்தூர். அப்பா நாராயணன், அம்மா அகிலா நாராயணன். 5-ம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ஷிவானி, அதன் பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்திருக்கிறார். டப்ஸ் மாஸ், டிக் டாக் என்று சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்ததால் தான், அவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்ததாம்.