சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டுள்ளார்.

2012ம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்றவர் பாடகி பிரகதி. சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த பிரகதி இசையின் மீதான ஆர்வத்தில் சூப்பர் சிங்கரில் பங்கேற்பதாகக் கூறியதோடு அந்த சீசனில் இரண்டாவது பரிசையும் தட்டி சென்றார்.

இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரகதி தற்போது தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் குடிக்கும் முதல் பீர் என வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த இதை கண்ட நெட்டிசன்கள் பீர் தொப்பை போடும்மா என்றும் குடிப்பது உங்கள் விருப்பம்.

ஆனால் மது அருந்துவதை பெருமையாக பொதுவெளியில் பதிவிடுவது சரியா என அவரை விமர்சித்து வருகின்றனர்.