நந்தினி சீரியல் நித்யாராமின் இரண்டாம் திருமணம் முடிந்தது… வைரலாகும் மணமக்களின் புகைபடம்..!

பிரபல இயக்குனர் சுந்தர்.சியின் நந்தினி சீரியலில் நடித்தவர் நித்யாராம்.

கர்நாடகாவை சேர்ந்த இவர் தற்போது லஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

நித்யாராம் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்.

இதையடுத்து அவருக்கு பெற்றோர்கள் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை அவர் திருமணம் செய்கிறார்.

Loading...

இந்நிலையில் இன்று கவுதம் – நித்யாராம் தம்பதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Loading...