ரோஜா சீரியலில் காட்டப்படும் காட்சிகளை பார்த்து போதும் நிறுத்துங்க என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டனர் ரசிகர்கள்.

சுவாரசியமாக சென்ற ரோஜா சீரியல் பிரைம் டைம்மான மாலை 7 மணிக்கு மாற்றப்பட்டது. இதனால் அதனை பார்க்கும் ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்தது.

ஆனால் திடீரென என்னவானதோ தெரியவில்லை, ரொம்ப மொக்கை போடுகிறார் இயக்குநர். சீரியலின் நாயகியான ரோஜாவுக்கு பூஜை அறையில் வெடித்த பாமால் கண்பார்வை போய்விட்டது.
சிகிச்சையளிக்க வந்த மருத்துவரை ஆள் வைத்து அனு கடத்த, தற்போது அங்காள பரமேஸ்வரிதான் துணை என அமுதநாயகி அம்மாவின் ஆசிரமத்தில் முகாமிட்டுருக்கின்றனர் அர்ஜுன், ரோஜா மற்றும் கல்பனா.

அதனையும் கண்டுபிடித்து விட்டு அவர்களுக்கு எதிரேயே ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி வில்லத்தனத்தை காட்டி வருகின்றனர் அனு, யசோதா மற்றும் அவரது கணவர். பரிகாரத்தை முறைப்படி செய்தால் ரோஜாவுக்கு கண்பார்வை வரும் என்ற நம்பிக்கையில் முழு மூச்சாக பரிகாரம் செய்து வருகிறார் அர்ஜுன்.

ஆனால் ரோஜாவுக்கு கண்பார்வை கிடைக்காது கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த மூவர் அணி, பரிகார பூஜையை கெடுக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அதன் உச்சபட்சமாக அர்ஜுனை கொலை செய்யவும் திட்டம் போட்டு விட்டனர்.

ஏற்கனவே முள் செருப்பு, அக்னி விளக்கு என பழைய மாவில் பூரி சுடும் டைரக்டர் தற்போது முள் படுக்கை வரை சென்று விட்டார். இதனை பார்த்தே கடுப்பாகி போயுள்ளனர் ரசிகர் பெருமக்கள்.
என்ன தான் பக்தி என்றாலும் இந்த காலத்து சீரியல்ல இப்படியா காட்டுவீங்க என என ரசிகர்கள் கடுப்பாகிறார்கள்.