விஜய் டிவி-யில் ஒளிபரப்பான, ராஜா ராணி என்ற சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதில் கார்திக் – செம்பா ஜோடி ரசிகர்களிடம் வெகுவாக பிரபலமாகினர். சீரியல் முடிவதற்குள் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் நிஜ காதலர்களாக மாறினர்.

அதன் பிறகு, பெரும்பாலான இணைய தளங்கள் அவர்களது ரொமாண்டிக் நேர்க்காணலை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பினார்கள்.

விஜய் தொலைக்காட்சியோ மேடையில் வைத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தது. இதற்கிடையே இரு வீட்டாரும் சம்மதிக்காததால், கடந்த மே மாதமே இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக, செப்டம்பர் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ். இதனைத் தொடர்ந்து இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர் நெட்டிசன்கள்.

சமீபத்தில் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் சஞ்சீவ், தனது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கர்ப்பிணி ஆல்யாவுக்கு பரிசாக புதுவீட்டை இருவரும் சேர்ந்து வாங்கியுள்ளனர்.

அந்த வீட்டுக்கு சமீபத்தில் இருவரும் குடிபோயுள்ளனர்.

Image result for alya manasa sanjeev