பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தனது சகோதரியை நினைத்து அழுத உருக்கமான வீடியோ வைரலாகியுள்ளது.

ஸ்டுடண்ட் ஆப் தி இயர், உத்த பஞ்சாப், ராசி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஆலியா பட். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆலியா பட்டும் ஒருவர்.

பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் – நடிகை சோனி ரஸ்தான் தம்பதியின் மகள் தான் ஆலியா பட். இவருடைய மூத்த சகோதரி ஷஹீன் பட். அவர் ஒரு எழுத்தாளர்.

இந்நிலையில் ஆலியாவும், ஷஹீனும் சமீபத்தில் மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அதில் ஷஹீன் எழுதிய புத்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தனது சகோதரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது குறித்து ஆலியா பேசினார். திடீரென அவர் தன்னை அறியாமல் அழ தொடங்கிவிட்டார். இதை கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

Emotional #AliaBhatt with sister #ShaheenBhatt #WeTheWomen curated by #barkhadutt in Mumbai today #instadaily #ManavManglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on