பிரபல தமிழ் திரைப்பட நடிகை அஷ்ரிதாவை இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனிஷ் பாண்டே திருமணம் செய்து கொண்டார்.

நேற்று சூரத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கர்நாடக அணி கேப்டன் மணிஷ் பாண்டே, வெற்றிக் கோப்பையுடன் மும்பையில் நடைபெறும் தன்னுடைய திருமணத்திற்கு சென்றார்.

இதையடுத்து உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை அவர் மணந்தார்.

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையிலேயே இத்திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட நெருக்கமான சிலரே பங்கேற்றனர்.