டிவி சீரியல்களில் இளம் ஜோடிகள் ரொமான்ஸ் செய்வது அதற்கேற்ப சினிமா பாடல்களை ஒலிபரப்புவது என்று செம ரகளையாக இருக்கிறது.

இதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமும் காத்திருக்கிறது. விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் கூட ஆடியன்ஸ் ஏமாந்து போயிடுவாங்க ஒரு பாட்டுங்க ப்ளீஸ்னு செயல்பாட்டு போட்டு உண்மையை வசனமாக பேசிவிடுவார்.

இது அப்படிப்பட்ட ரொமான்ஸ் காட்சி இல்லை. பாருங்களேன் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருக்கிறது இந்த ப்ரோமோ.

தேவி மாயன்

மாயன் தேவி ஜோடி பற்றித்தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே. தேவியின் மனதில் இடம் பிடிக்காமல் போக மாட்டேன் என்று மாயனும், இருவரையும் பிரிக்காமல் விட மாட்டோம் என்று தேவி குடும்பமும் விவாகரத்து செய்துவிட தேவியை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

தேவிக்கு மாயன் என்றால் இஷ்டம். அவனை பிரிய மனம் இன்றி கோர்ட்டுக்கு அழைக்கும் போதெல்லாம் சாக்கு போக்கு சொல்லி போகாமல் இருந்து விடுகிறாள். அவனை ரொம்ப பிடிக்கும் என்று கூறியும் விடுகிறாள்.

இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகும் சூழலில், மாயனின் தங்கை தேவியின் தம்பியை காதலிப்பதை மாயன் மறுத்துவிட்டான் என்று கோபம் கொள்கிறாள்.

இஷ்டம் தேவிக்கு என்னைய நம்புங்க.. என்னை கை விட்டுடாதீங்க. எப்போதும் மனசில் பட்டதை பட்டுன்னு பேசிருவேன். ஆனா, இந்த விஷயத்துல மனசு ஒன்னு சொல்லுது.. தங்கச்சி ஒன்னு சொல்லுதுங்க.எதை கேட்கறதுன்னு தெரியலைன்னு சொல்லி இப்படியே கையைப் பிடிச்சுக்கோங்கன்னு சொல்றான்.

டேய் நீதான் என் கையை பிடிச்சு இருக்கேன்னு தேவி சொல்ல கையை எடுத்து ஏங்க என் கையை பிடிச்சுக்கோங்க.

இந்த விஷயத்தில் நீங்க என் கூட இருங்கன்னு சொல்றான்.அவள் தவிர்க்க முடியாம இவன் கையை பிடிச்சுக்கிட்டு, இந்த டயலாக்கை நீ என் மடியில படுத்துகிட்டு சொல்வேன்னு எதிர்பார்த்தேன்னு அழகாக கோலி கண்ணால் பார்த்து சொல்கிறாள். அய்யய்யோ இருங்க இருங்க..

என் கையை

மறுபடியும்னு இவன் ஆரம்பிக்க டேய் வாய்ப்பு ஒரு தடவைதான் கிடைக்கும்.அடுத்த தடவை பெட்டரா ட்ரை பண்ணுன்னு சொல்லிடறா. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை..பாவம் மாயன்!

Loading...