பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். நிகழ்ச்சிக்கு முன்னும் பின்பும் இவருக்கு சில பிரச்சனைகள் இருந்துவருகிறது.

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் மிரா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். ஆனால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

படமும் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூல் ஈட்டியது. இந்நிலையில் வெற்றி விழா கொண்டாடிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும், படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் உட்பட முக்கிய நபர்களை இணைத்து டிவிட்டரில் திட்டியுள்ளார்.

படப்பிடிப்பில் கலந்துகொண்டதற்கான புகைப்படங்களையும் பதிவிட்டு அவர் வெட்கம் இல்லாம எப்படி வெற்றி விழா கொண்டாடுறீங்க என கேட்டுள்ளார். மேலும் தான் ஏமாற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Loading...