உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் மீரா மிதுன்.

ஏற்கனவே இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாக்ஷி அகர்வால், அபிராமியை விளாசி இருந்ததை தொடர்ந்து தற்போது அபிராமியை மீண்டும் விளாசியுள்ளார்.

என்னை கலாய்க்க கேவலப்படுத்த ஆள் வைத்து வேலை செய்யாத, நீ என்னால தான் வளர்ந்த என்பது உலகத்துக்கே தெரியும் என்பது போல அந்த பதிவில் கூறியுள்ளார்.

எனக்கு எப்போதுமே என் பேன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க என கூற நெட்டிசன்கள் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்களா? என்றெல்லாம் கலாய்த்தெடுத்துள்ளனர்.

அதே சமயம் அபிராமி உங்களிடம் ஏமார்ந்து விட்டார் என கூற ஜோ மைக்கேல் கடந்த வாரம் ஜெயிலுக்கு போய்ட்டார். கூடிய விரைவில் அபிராமியும் ஜெயிலுக்கு போவார் என கூறி சர்ச்சை பதிலை கொடுத்துள்ளார்.

Loading...