அபியும் நானும் உட்பட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கணேஷ் வெங்கட்ராம்.

இவருக்கும் சீரியல் நடிகையான நிஷாவுக்கும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களின் காதல் அனுபவங்கள் குறித்து நிஷா கூறுகிறார்.

நானும், கணேஷும் முதலில் நல்ல நண்பர்களாக மட்டும் இருந்தோம். ஒரு சமயத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருப்பதை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே அதை வெளிக்காட்டவில்லை.

அப்போது, ஒருநாள் மதிய உணவு சாப்பிட கணேஷும் நானும் வெளியில் சென்றிருந்தோம்.

கணேஷ் என்னிடம் திடீரென தேவாலயத்துக்கு செல்லலாமா? என்று கேட்டார். நானும் அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

டிசம்பர் மாதம் என்பதால் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்துக்காக கொண்டாட்டங்கள் தயாராகிக் கொண்டிருந்தன.

அழகான பூக்கள், கிறிஸ்துமஸ் மரம் என தேவாலயமே பிரகாசமாய் இருந்தது.

அந்த நொடியில் அவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார், எனக்கு ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.

அப்போதே, இவர் தான் எனக்கானவர் என்பதை அறிந்து கொண்டேன், உடனே சம்மதமும் தெரிவித்துவிட்டேன்.

நாட்கள் செல்ல இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

Loading...