தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தபோது, ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்தனர். ஆனால், திடீரென இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தங்களது காதல் குறித்து தனுஷ் கூறியதாவது, லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தான் நான் படித்தேன்.

அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடு படிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும் நட்பாகத்தான் பழகினோம்

படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள் சந்திக்கவில்லை. துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க.

ஒவ்வொரு காட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்க வந்தபோது, என்னுடனும் நிறைய நேரம் பேசுவார்கள்.

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டு பாராட்டினாங்க.

அந்த சமயங்களில் தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத்தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம். பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என கூறியுள்ளார்.

மலரும் நினைவுகள்…….

Loading...