அக்காவுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு இருக்கையில்.அக்கா மாப்பிள்ளை பிடிக்காமல் ஓடிப்போகிவிட, பதிலாக அந்த இடத்தில் தங்கை மணப்பெண்ணாக அமர வைக்கப்பட்டு கல்யாணமும் நடந்து விடுகிறது.

அக்கா ரேணுகா படித்தவள், தங்கை ஜானு பிளஸ் 2 வரைதான் படித்தவள். பெரிய பணக்கார இடத்தில் அக்காவுக்கு பதிலாக தான் மணமகளானதில் வருத்தம் இல்லை ஜானுவுக்கு.

ஆனால், கல்யாணத்தை பார்க்க கூடாது என்று அப்பாவைத் துரத்தியத்தில்தான் வருத்தம் அர்ஜுனுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமே இல்லை என்றாலும், அம்மாவின் வீம்புக்காக ஜானுவை கல்யாணம் செய்துக்கறான்.

மருமகளாக ஜானு மீனாட்சி அம்மா வீட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மருமகளாக என்று சொல்வதை விட வெறும் வீட்டு வேலைக்காரியாகவே ஜானு அந்த வீட்டில் கூண்டுக் கிளி போல இருக்கிறாள்.

ஒவ்வொருவர் மனதிலும் அவர் இடம் பிடிக்க முயன்றும், மீனாட்சி அம்மாவுக்கு எதிராக இருக்கும் துர்கா போன்றவர்கள் ஜானுவை வீட்டை விட்டுத் துரத்தவே சதி செய்கிறார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விஜய் டிவியில் அரண்மனை கிளி சீரியல் பல்வேறு பாதைகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்ப காலக் கட்டத்திலிருந்து பார்த்தால், ஜானுவும் அர்ஜுனும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகின்றனர்.

அரண்மனை கிளி விவாகரத்து வேலைகள் ஒரு புறம் ஜோராக நடந்துக்கொண்டு இருக்க, இப்போது ஜானு மீனாட்சி அம்மா மனதிலும் இடம் பிடித்து விட்டாள்.

இருந்தாலும் இந்த விவாகரத்து விஷயம் பற்றி மட்டும் யாரும் மறுத்துப் பேசாமல் இருக்கிறார்கள். அதற்குள் ஜானு புருஷனிடம் ஆங்கிலம் கத்துக்கிட்டு நன்றாக பேசவும் ஆரம்பித்து இருக்கிறாள்.

மீனாட்சி அம்மாவிடம் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. சிரிக்கும்போது கியூட்டா இருக்கீங்க என்றெல்லாம் சொல்லி அவங்களை அசத்தறா. அவங்களும் மகிழ்ச்சியாக தேங்க்யூ ஜானு… இப்படித்தான் இருக்கணும். எல்லாத்திலும் பிரில்லியண்டா இருக்கணும்னு மீனாட்சி அம்மாவும் சிரிக்கறாங்க. இப்படி ஸ்மூத்தா கதை போகுது.

ஆங்கிலத்தில் பேசி

Loading...