காதலர் தினம் மூலம் நடிகரானாவர் மும்பையைச் சேர்ந்த குணால். அதன் பின்னர் பார்வை ஒன்றே போதுமே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்புகள் மங்கவே மும்பை திரும்பினார்.

அங்கு பெரிய அளவில் ஹீரோவாக அவர் எடுபடவில்லை. இதனால் ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருந்தார்.

அவருக்கு அனுராதா என்ற மனைவியும், குழந்தைகளும் உண்டு. கருத்து வேறுபாட்டால் அனுராதா, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு போய் விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் குணால் பிணமாகக் கிடந்தார்.

மின் விசிறியில் அவரது பிணம் தொங்கியது. மரணம் சம்பவித்த சமயத்தில், குணாலின் காதலியான இளம் நடிகை லவீனா அங்கிருந்தார்.

இதையடுத்து போலிசார் லவீனாவை கைது செய்து விசாரித்த நிலையில் பின்னர் விடுவித்தனர்.

குணாலின் மரணத்துக்கு காதலில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என சொல்லப்பட்டது, இதோடு சினிமா வாய்ப்பு இல்லாததும் அவர் இம்முடிவை எடுக்க காரணம் என கூறப்பட்டது.

ஆனால் கடைசி வரை குணால் மரணத்தில் மர்மம் நீடித்து தான் வருகிறது.

Loading...