லாலாவுக்காகத் தான் பிக் பாஸ் பைனலுக்கு தான் போகவில்லை என சாண்டியின் முதல் மனைவி காஜல் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Image result for kaajal pasupathi husband

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றவர் நடன இயக்குநர் சாண்டி. பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்த நாட்களில் எல்லாம் தன் மகள் லாலா பற்றி அவர் பேச மறந்ததில்லை. இதனாலேயே சாண்டியைப் போலவே அவரது மகள் லாலாவும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமாகி விட்டார்.

Image result for kaajal pasupathi husband

பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரான காஜல், சாண்டியின் முதல் மனைவி ஆகும். முறைப்படி இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது அவர்களுக்குள் காதல் எதுவும் இல்லையென ஒவ்வொரு பேட்டியிலும் தெளிவாகவே சொல்லி வருகிறார் காஜல்.

அதோடு பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பமான நாள் முதல் சாண்டிக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கம் மூலம் வாக்கும் சேகரித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் நல்ல விமர்சகராகவும் இருந்து வந்தார்.

ஆனால், நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிய போது ஏனோ பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்தி விட்டதாக கூறி விட்டார்.

Image result for kaajal pasupathi husband

ஆனபோதும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறுவது குறித்து மட்டும் அவ்வப்போது சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். கூடவே சாண்டியின் மகள் லாலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டார்.

 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 பினாலேவுக்கு காஜல் செல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. அதற்கான காரணம் குறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பிக் பாஸ் தரப்பில் இருந்து என்னை பினாலேவுக்கு அழைத்திருந்தனர். ஆனால் லாலாவுக்காக நான் விட்டுக் கொடுத்து விட்டேன். அங்கு செல்லப் போவதில்லை’ என உருக்கமாக அவர் பேசியுள்ளார்.

எப்போதும் கம்பீரமாக கலகலப்பாக பேசும் காஜல், அழுவது போன்று சோகமான தொனியில் பேசியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டான் ரசிகர்கள்

காஜலை அவரது டிவிட்டர் ரசிகர்கள் டான் என அழைப்பது தான் வழக்கம். காஜலின் இந்த வீடியோவைப் பார்த்து பதறிப் போன அவர்கள், ‘என்னாச்சு.. ஏன் இவ்வளவு சோகம்?’ என அக்கறையுடன் விசாரித்துள்ளனர். மேலும் சிலரோ, ‘கவலைப் படாதீங்க டான், பழைய மாதிரி சிரிச்சிட்டே இருங்க’ என அறிவுரையும் கூறியுள்ளனர்.

Loading...