பூவேலி என்று ஒரு படம்.. கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தை செல்வா மிக அருமையாக இயக்கி இருப்பார்.

வெற்றிப் படம் என்றும் சொல்லலாம். நவரச நாயகன் கார்த்திக், கவுசல்யா அப்பாஸ், ஹீரா நடித்து இருப்பார்கள்.அப்போதைய காலக் கட்டத்தில்தான் காதலர்கள் என்று பீச்சில் உட்கார்ந்து பேசுவது இதற்கெல்லாம் போலீஸ் தடை விதித்து ஸ்டேஷன் அழைத்து போயி என்கொயரி கூட செய்வார்கள்.

இந்த முடிச்சை வைத்துதான் பூவேலி படமும் இருக்கும். இப்போதும் பீச், பார்க்கில் காதலர்கள் சுற்றினால். ரவுடிகள் வந்து கேட்பது அல்லது கல்யாணம் செய்து வைப்பது என்று சீரியல்களில் காண்பிக்கிறார்கள்.

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

ஜீ தமிழ் டிவியின் ஒருஊருல ஒரு ராஜகுமாரி சீரியலில் ராசாத்தி வயதுக்கு மீறிய குண்டு பெண்.இவளுக்கு கல்யாணம் நடக்கிறது.

முதலில் புருஷனுக்கு பிடிக்காமல் இருந்த ராசாத்தியை இப்போது பிடிக்க ஆரம்பிக்கிறது. இது சீரியலின் மெயின் கதையாக சென்றுகொண்டு இருக்கிறது.

ராசாத்தியின் நாத்தனார் புனிதா, அண்ணி ராசாத்தியின் தம்பியை காதலிக்கிறாள். என் அக்காவே உன் வீட்டில் இன்னும் ஏத்துக்கப்படாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. இந்த லட்சணத்துல நீ என்னை காதலிக்கிறேன்னு தெரிஞ்சா என் அக்கா வாழக்கை என்னாகுமோ என்று பயப்படுகிறான் தம்பி.

ராசாத்தி நாத்தனார்

பார்க்குக்கு வா என்று புனிதா தனது அண்ணியின் தம்பிக்கு போன் செய்கிறாள். அப்போது அவன் வந்து, இப்படி சந்திக்க வேணாம் புனிதா.நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்னு சொல்றான் அவன்.இப்படிப்பேசிக்கொண்டு இருக்கையில், காவி வேஷ்டியும், ருத்திராட்ச மாலைகளும் அணிந்தபடி ஒரு கும்பல் வருகிறது.

வந்தவர்களின் தோற்றம் இப்படி இருக்க, அதை என்ன என்று நினைப்பது? சரி, அதிருக்கட்டும், இவர்களை போல பலரையும் பார்த்து மிரட்டிவிட்டு வந்தவர்கள், இவர்களிடம் நீங்கள் யார்,

காதலர்களா.. கல்யாணம் செய்துக்குவீங்களா.. இல்லை இப்படியே பழகிட்டு ஜாலியா அனுபவிச்சுட்டு பிரிஞ்சுருவீங்களா என்று கலாட்டா செய்துவிட்டு, தாலியை வலுக்கட்டாயமாக கட்ட செய்கிறார்கள். இன்னுமா இப்படி நடக்கிறது என்று கேட்க தோன்றுகிறது.

பார்க்கில் சந்திப்பு

 

Loading...