பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் அவர் தொடர்ந்து படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அண்மையில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவரின் காட்சிகள் நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இது குறித்து மீரா மிதுனும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அக்னி சிறகுகள் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் வேடத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கவுள்ளாராம்.

அதே வேளையில் மீரா பாலிவுட் படங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Loading...