தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. பொதுவாக திருமணம் ஆகிவிட்டால் நடிகைகளுக்கு சினிமாவில் மார்க்கெட் சரிந்துவிடும்.

ஆனால் சமந்தா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளார், திருமணத்துக்கு பின்னரும் அவரின் மார்க்கெட் ஏறுமுகத்தில் தான் உள்ளது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ பேபி படம் பெரிய வெற்றியை பெற்றது, அடுத்து ‛96′ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்துடன் இணைந்து நடிக்கிறார் சமந்தா. இதையடுத்து பல கதைகளை கேட்ட அவர், இன்னும் எந்த புதிய படத்திலும் கையெழுத்திடவில்லை.

Image

ஆனால், மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள ‛எ பேமிலி மேன்’ என்ற வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த தொடரின் முதல் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சமந்தா ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார், இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Image

Image

 

Loading...