விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர் ராஜா ராணி. இந்த சீரியலில் செம்பா – கார்த்திக் கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா- சஞ்சீவ நடித்து புகழ்பெற்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ராஜா ராணி சீரியல் முடிவடைந்தது. அந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஆல்யா , சஞ்சீவ் இருவரும் காதலிக்க தொடங்கனார்.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆல்யா மானசா பங்கேற்பார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்.
ராஜா ராணி தொடரின் இரண்டாம் பக்கத்தில் கவின் – லொஸ்லியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்த தகவலை அறிந்த கவின்ஸ்லியா ரசிகர்கள், பிக்பாஸில் பிரித்து வைத்திருந்த இந்த ஜோடியை சீரியலில் காதலர்களாக, கணவன் மனைவியாக பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Loading...