எத்தியோப்பியாவில் 107 வயது முதியவர் ஒருவர் 33 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மத்திய எத்தியோப்பியாவில் உள்ள Addis Ababa எனும் நகரில் வசித்து வரும் Hajji Abdulkadir Dekema(107) என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.

இவர்கள் மூலம் இவருக்கு குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என மொத்தம் 108 பேர் உள்ளனர். இந்நிலையில் இவர் Furo Guyo(33) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

தனக்கு ஏற்கனவே அதிக பிள்ளைகள் இருந்தாலும், தற்போது திருமணம் செய்துகொண்ட பெண் மூலம் இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனது ஆசை என கூறியுள்ளார்.

எத்தியோப்பியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள கிராமப்புறப் பகுதிகளில் பலதார மணம் என்பது நடைமுறையில் உள்ளது.

எத்தியோப்பியாவில் மூன்றில் இரண்டு பங்கு கிறிஸ்துவர் மற்றும் மீதமுள்ளவர்கள் முஸ்லீம்கள் ஆவர், அங்கு சிறுபான்மையினராக இருக்கும் இவர்கள் இதுபோன்ற பழக்கத்தை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...