அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் குழந்தை பெற்றெடுத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா சௌத் பெண்ட் பகுதியை சேர்ந்த மேயர் பீட் புட்டேஜெஜ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இன்று அதிகாலை மேரி- கேபு என்கிற தம்பதியினர் 8.15 மணிக்கு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தனர். மேரி நிறைமாத கர்ப்பிணி, 9 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு முன்னதாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். அலுவலகத்தில் மோதிரம் இல்லாத காரணத்தால் ரிப்பனையே மோதிரமாகப் பயன்படுத்தி திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கு அலுவகத்தில் இருந்த ஊழியர்களே சாட்சிகளாயினர். அடுத்த சில நிமிடங்களில் தம்பதியினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்களுக்கு அங்கு அழகிய குழந்தை பிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களுக்கும், புதிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் இந்த அழகான உலகத்திற்கு குழந்தை ஜேடை வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Loading...