பிரேசிலில் திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணப் பெண் உயிரிழந்த நிலையில், அவரின் வயிற்றில் இருந்த குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

பிரேசிலின் São Paulo-வில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் Jessica Guedes(30) என்ற பெண்ணிற்கும் Flavio Gonçalvez என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.

இதற்கான திருமண ஏற்பாடுகள் கோலகலமாக செய்யப்பட்டிருந்தன. Jessica Guedes ஆறு மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தார்.

இந்நிலையில் Jessica Guedes-க்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது, அவர் கழுத்து வலிக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் உறவினர்களோ திருமண களைப்பில் அவருக்கு இது போன்று தோன்றலாம், கர்ப்பிணியாக வேறு இருக்கிறார் என்று சாதரணமாக நினைத்துள்ளனர்.

ஆனால் அவர் திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மூளைசாவு அடைந்தார். இருப்பினும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை பத்திரமாக காப்பாற்றப்பட்டது. இப்போது Flavio Gonçalvez மிகுந்த வேதனையில் இருக்கிறார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்திற்கு Flavio Gonçalvez அளித்துள்ள பேட்டி ஒன்றில், அன்றைய தினம் நான் அவளுக்காக தேவாலயத்தின் பலி பீடத்தில் காத்திருந்தேன்.

ஆனால் அவள் வர தாமதமானது, நான் எதோ இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக இப்படியெல்லாம் செய்கின்றனர் என்று தான் நினைத்தேன். அப்போது அவளின் உறவினர், உடனடியாக ஓடி வந்து, அவள் காரில் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறினார்.

இதனால் உடனடியாக நான் ஓடிச் சென்று காரின் கதவை திறந்தேன், அப்போது அவள் என் மடியில் படுத்துக் கொண்டாள். நான் இருக்கிறேன் பேபி என்று அவளிடம் கூறினேன்.

அவள் எல்லாம் சரியாக செல்கிறது, கொஞ்சம் கழுத்தில் மட்டும் வலி இருக்கிறது என்று கொஞ்சம் சுயநினைவு இல்லாதது போல் பேசினாள்.

நான் தீயணைப்பு துறையில் வேலை பார்ப்பதாலும், என்னுடைய திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களும் அந்த துறையில் இருந்ததால், நாங்கள் முதலுதவி கொடுத்தோம்.

அதன் பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், ஒரு மருத்துவமனையில் இது மிகவும் சீரியஸான கேஸ் என்று கூறியதால், உடனடியாக மகப்பேரு மருத்துவமனையை மாற்றினோம்.

அங்கு சொன்ன மருத்துவ அறிக்கையில், தாய்க்கு பாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உட்புற இரத்தப்போக்கு காரணமாக அறுவை சிகிச்சையாளர்கள் கருப்பையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

அதன் படி குழந்தையை பத்திரமாக காப்பாற்றினோம், ஆனால் அவள் மூளை சாவு அடைந்துவிட்டாள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் Jessica Guedes-வுக்கு உடல்களை தானம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை, இதனால் அவர் இறந்த பின்பு அவரின் உடல்களின் சில பாகங்களை குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். அதன் பின் நேற்று அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர் .

திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, Jessica Guedes மிகவும் மகிழ்ச்சியாக மணப்பெண்ணாக கையை அசைத்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Loading...