லெபனானின் மூன்றாவது பெரிய நகரம் சிடானில் உள்ள மருத்துவமனை வாசலில் தினமும் பிச்சை எடுத்து வரும் பெண், ஹஜ் வாஃபா முகமது அவாத்.

இவர், தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஜேடிபி என்ற வங்கியில் தினமும் சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த வங்கி மூடப்பட்ட நிலையில், இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்துக்கு அவர்களுக்கு வழங்கப்படும் என அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரியாத் சலாமே கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை, ஹஜ் வாஃபா முகமது அவாத்துக்கு லெபனான் மத்திய வங்கியில் இருந்து வழங்கிய இரண்டு காசோலைகளின் போட்டோ காப்பி, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் இருந்த லெபனான் பவுண்ட்டின் இந்திய மதிப்பு, சுமார் ரூ.6 கோடியே 37 லட்சம்! இது பிச்சைக்காரப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட காசோலை என்பது பிறகுதான் தெரிய வந்துள்ளது. வாஃபா கோடீஸ்வரி என்பது, அவருக்கு பிச்சை போடுபவர்களுக்குத் தெரிந்ததை அடுத்து, அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Loading...