ஆஸ்திரேலியாவில் 9 குழந்தைகளுக்கு தாயான பெண் தன்னை விட 21 வயது குறைவான இளைஞரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார்.

டினா ஜாக்சன் (45) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 9 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிராண்டன் (24) என்ற இளைஞரை கடந்த 2013-ல் டினா சந்தித்துள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர்.

பின்னர் இது காதலாக மாறியுள்ளது. பிரண்டனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக டினா மீண்டும் கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில் அழகான குழந்தையை சமீபத்தில் பெற்றெடுத்தார் டினா. தனது காதலனான பிராண்டனை விரைவில் டினா திருமணம் செய்யவுள்ளார்.

இது குறித்து டினா கூறுகையில், எனது மூன்று பிள்ளைகளை விட பிராண்டன் இளையவராவார்.

என்னை விட அவர் 21 வயது குறைவானவர் என்பதால் பலரும் எங்களை தாய் – மகன் என நினைத்துவிடுகிறார்கள்.

இது முதலில் கவலையை ஏற்படுத்தினாலும், பின்னர் பழகிவிட்டது.

என்னுடைய பிள்ளைகள் எனது காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் ஏற்று கொண்டார்கள்.

நாங்கள் குடும்பமாக ஒன்றாக இருக்கிறோம். எங்களது திருமண திகதியை விரைவில் முடிவு செய்யவுள்ளோம் என கூறியுள்ளார்.

Loading...