இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் கோமாவில் விழுந்த இளம்பெண் கண்விழித்த போது தாயாரானது அவரை திக்குமுக்காட செய்துள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் தாயாருடன் குடியிருந்து வருபவர் 18 வயதான மாணவி எபோனி ஸ்டீவன்சன்.

இவருக்கு சமீப நாட்களாக தொடர்ந்து கடுமையான தலைவலி ஏற்பட்டு அல்லல்பட வைத்துள்ளது.

இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் தொடர்ந்து வலிப்பு நோயும் தாக்கியுள்ளது.

இதனால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எபோனி.

அவரது அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை கோமாவில் வைத்திருந்தனர்.

ஆனால் நான்கு நாட்களுக்கு பின்னர், அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி கோமாவில் இருந்து கண்விழித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தாம் தாயாரானதும் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்ததும் மருத்துவர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.

எபோனிக்கு அதுவரை மாதவிடாய் தவறியதில்லை எனவும், வயிறும் பெரிதாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

எபோனிக்கு இரண்டு கருப்பை கொண்ட விசித்திர நிலை இருப்பதாக சுட்டிக்காட்டிய மருத்துவர்கள், 3,000 பெண்களில் ஒருவருக்கே இந்த நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வலிப்பு நோய் காரணமாக மருத்துவமனை சேர்ப்பித்ததும் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் எபோனி கர்ப்பிணியாக இருப்பது உறுதியானது.

மட்டுமின்றி உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறவில்லை எனில் அது எபோனியின் உரிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கோமாவில் இருந்த அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. டிசம்பர் 3-ஆம் தேதி பெண் குழந்தைக்கு தாயானார் எபோனி.

தற்போது இளந்தாயாரான எபோனி தமது கல்வியை தொடரவே ஆசைப்படுகிறார். குழந்தையை அவரது தாயாருடன் இணைந்து வளர்க்கவும் முடிவு செய்துள்ளார்.
Loading...