வரும் ஞாயிறுடன் பிக் பாஸ் முடிய உள்ள நிலையில், யார் வெற்றியாளர் என்ற கேள்வியில் நேயர்கள் உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி, லாஸ்லியா, ஷெரின் மற்றும் முகென் ஆகிய நான்கு போட்டியாளர்கள் இறுதி சுற்றில் உள்ளார்கள்.

இந்த நிலையில், கவின் மற்றும் தர்ஷன் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் விருந்தினராக வருகிறார்கள்.

கவின் பிக் பாஸ் அளித்த 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கு காரணம், லாஸ்லியா தான் என்று கருத்துகள் பரவலாக கூறப்படுகிறது.

கவின் வீட்டை விட்டு வெளியேறியவுடன் லாஸ்லியா பழைய உற்சாகத்தில் இல்லை. அதே போல சாண்டி முழுவதும் அமைதியாக இருந்தார்.

இதை தொடர்ந்து, இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து லாஸ்லியாவின் அப்பாவிடம் வீடியோ கால் பேசுகிறார்.

லாஸ்லியாவிற்கு கவின் உள்ளே வந்தது சந்தோசம் அளித்த நிலையில், அவரின் அப்பாவிடம் பேசியது சற்று சோகத்தை அளித்து உள்ளதே உண்மை.

அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார் லாஸ்லியா, இதில் இருந்து கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் வெளியே வந்தவுடன் தொடரும் என்றே தெரிகிறது.

Loading...