அக்டோபர் 21 அன்று ஹரியானாவில் தேர்தலுக்கு அனைவரும் ஆயத்தமாகிவருகின்றனர். ஹரியானாவில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தமிழ்தான் 40 ஆண்டுகளாக ஹரியானாவில் அதிகாரபூர்வ ஆட்சி மொழியாக இருந்துள்ளது.

2010 ஆம் ஆண்டுதான் பஞ்சாப் மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக மாற்றினர். ஏன் 2014 ஆண்டு ஆட்சியை பிடித்த மனோகர் லால் கட்டர் தமிழில் பேசி பரப்புரையும் மேற்கொண்டார்.

இதை பற்றி ஹரியானா மக்களிடம் கேட்டபொழுது “இங்கு தமிழ் பேசும் மக்கள் 1 சதவிகிதம் கூட இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக கொண்டிருக்கும் பொழுது தென்னிந்திய மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக ஏற்கலாம் என்ற எண்ணத்தில் வைத்திருக்கலாம் என்கின்றனர்.

ஆனால் சிலர் பஞ்சாபி மொழியை வைக்கக்கூடாது என்பதற்காகவே தமிழை வைத்துள்ளனர் என்றும் கூறிவருகின்றனர்.

இதில் ஆச்சிரியமாக விஷயம் என்னவென்றால் தமிழை பற்றி தெரிந்துகொள்ள ஹரியானா தன்னார்வலர்களும், மக்களும் தமிழ் நாட்டிற்கு படையெடுத்து வந்துள்ளனர்.

உண்மையில் 1% தமிழ் மக்கள்கூட வாழாத இடத்தில்தமிழை ஆட்சி மொழியாக 40 வருடங்களாக வைத்திருந்துள்ளனர் என்றால் தமிழன் என்கிற பெருமை யாருக்குத்தான் இருக்காது.

Loading...