நடு இரவில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்டக்டர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. 28 வயதாகிறது.

சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக இருக்கிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேட்டிலிருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில் ஏறி உள்ளார்.

நடு இரவில் நன்றாக அசந்து தூங்கிவிட்டார். அப்போது யாரோ தன்னை தொடுவது போல உணர்வது, திடீரென தமிழ்செல்வி கண்விழித்து கொண்டார்.

அப்போது, கண்டக்டர் ராஜூ, பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், தமிழ்செல்வியின் மார்பை பிடித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வி, கண்டக்டரின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் மிகப்பெரிய பரபரப்பு அங்கு ஏற்பட்டது.

பின்னர், கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில் இறங்கிய பிறகும், தமிழ்ச்செல்வி கண்டக்டர் ராஜுவிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு ராஜு, “உனக்கு வேணும்னா ஸ்டேஷனில் போய் புகார் தந்துக்கோ” என்று அலட்சியமாக பதில் சொல்லி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வி பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜு மீது மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடமும் தமிழ்செல்வி பேசினார். அப்போது, “இப்படி பாலியல் தொல்லை அடிக்கடி நிறைய இடத்துல நடக்குது. ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக வந்து ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும்” என்றார்.

Loading...