புதுச்சேரியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாக்கு முடையான்பட்டு பகுதியில் கூலித்தொழிலாளி வேலு – ஞானசுந்தரி தம்பதி வசித்து வந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஞானசுந்தரி அவரை பிரிந்து சென்று கடந்த 20 நாட்களாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்

பின்னர் தானாகவே சமாதானம் ஆன வேலு மனைவியை சமரசப்படுத்தி அழைத்து வர கலைவாணன் நகருக்கு சென்றார். ஆனால் எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தே இருந்தால் வாழ்வது கடினம் என கூறி கணவனுடன் செல்ல மறுத்து விட்டார் ஞானசுந்தரி.

இதையும் படிங்க : சிங்கத்தை நேருக்கு நேராக எதிர்த்து இளம் பெண் செய்த செயல்! அதிர வைக்கும் வீடியோ..!

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஞானசுந்தரி மீது வீசினார். அதிர்ஷ்டவசமாக ஞானசுந்தரியின் கன்னத்தில் மட்டுமே காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் கூச்சலிடவே அங்கு திரண்ட பொதுமக்கள் வேலுவை சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். பொதுக்களிடம் இருந்து எப்படியோ தப்பி ஓடினார் வேலு. பின்னர் ஞானசுந்தரி மீட்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த கோரிமேடு போலீசார் ஞானசுந்தரியிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய வேலு காயம் அடைந்துள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனையில்தான் தஞ்சமடைந்திருப்பார் என்ற கோணத்தில் தேடி வருகின்றனர்.

Loading...