மனித வாழ்க்கையில் நமது ஆன்மாவானது ஒரு முறை பிறந்ததும் தன் உடலில் வாழ்க்கையை துவங்கி பின்னர் அந்த உடலை பிரிந்து தனது வாழ்க்கையை மீண்டும் துவங்கி சுழற்சி முறையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

நமது இந்து புராணங்களின் படி பேயாக நிறைவேறாத ஆசையுடன் அலையும் ஆன்மாக்கள் மேல் உலகத்திற்கும் செல்ல முடியாமல் கீழ் உலகத்திற்கும் செல்ல முடியாமல் எதற்காக அவ்வாறு சுற்றி வருகிறது என்பது குறித்து இனி காண்போம்.

தர்மம்:

நமது மனித வாழ்க்கை என்பது பல விதமான கட்டங்களை கொண்டது. இந்த கட்டங்களில் மனித உருவில் இருக்கும் ஆன்மாவானது தனது வாழ்க்கையின் நிலைகளை அந்தந்த சூழ்நிலையில் எதிர்கொண்டு., அந்த சமயத்தில் அந்த ஆன்மாவின் நற்செயல்களை பொறுத்தே ஆன்மாவின் தர்மமமானது நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆன்மா பிரிவு;

ஆன்மாவின் பிரிவு குறித்து கருட புராணத்தில் கூறியிருப்பது போல மனிதரின் இறப்பிற்கு அடுத்தபடியாக உடல் மட்டுமே தன் அழிவை எதிர்கொள்கிறது. அதன் உடலில் இருந்து வெளியேறும் ஆன்மாவானது தனது தர்ம பலன்களை பொறுத்த வரையில் அடுத்த வாழ்க்கைக்கு தயாராகிறது. உடலும் ஆன்மாவும் தனித்தனியாக இருப்பது கடினமான செயலாகும்.

இதையும் படிங்க :  உறவுக்கு வர மறுத்த மனைவி: ஏக்கத்தில் இருந்த கணவன் செய்த கொடூர செயல்..!

ஆன்மா விடுதலை:

நமது உடலின் மரணத்திற்கு அடுத்தபடியாக நமது ஆன்மாவிற்கு இரு நிலைகள் உள்ளது. இதில் முதல் நிலையாக விடுதலையும்., மற்றொரு நிலையாகவும் கட்டுக்குள் இருப்பதும் ஆகும். இந்த இரு ஆன்மாவில் விடுதலை அடையும் ஆன்மாவானது கடவுளை உணர்ந்து தனது நித்திய வாழ்க்கையை தொடரும்.

கட்டுப்பாட்டில் உள்ள ஆன்மா:

உடலின் மரணத்திற்கு பின்னர் கட்டுக்குள் இருக்கும் ஆன்மா அவர்களின் பாவ புண்ணியத்தை பொறுத்து சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்லும். புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடனும்., பாவம் செய்தவர்கள் நரகத்தில் தண்டனையும் பெறுவார்கள்.

துர்மரண அல்லது நிறைவேறா ஆசையுள்ள ஆன்மா:

நமது உடலில் இருந்து பிரியும் ஆன்மாவானது விடுதலையை அடையாமல் இருப்பதற்கு அந்த நபரின் நிறைவேறா ஆசை மற்றும் துர்மரணத்தின் காரணமாக அவர்களின் ஆசையை நிறைவேற்றவும்., அவர்களின் இறப்பிற்கு காரணமான நபர்களை பழிவாங்கவும் பேய்களாக இந்த உலகில் சுற்றி வருகின்றனர்.

பேய் அல்லது ஆவி:

இறப்பிற்கு பின்னர் ஆன்மா பேய் வடிவில் இருக்கும் சமயத்தில்., அந்த பேய் மூன்று மூலக்கூறுகளை கொண்டு உருவானதாகும். அவ்வாறு இருக்கும் பேய்கள் காற்று., ஆற்றல் மற்றும் வெற்றிடம் போன்றவையாகும். தனது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உள்ள சுழற்சியை முடிக்காத ஆன்மாவானது விடுதலையை அடையாது.

Loading...