16 வயது இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பையில் உடல் பாகங்கள் வைக்கப்பட்ட சம்பவமானது மெக்சிகோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ மாநாட்டில் வெராகுருஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு இசாமர் மென்டிஸ் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவருடைய வயது 16. இவர் அந்த மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார். வெள்ளிக்கிழமை அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற இசாமர் நடுவழியில் காணாமல் போனார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதே பகுதியில் சாலையோரத்தில் கிடந்த பிளாஸ்டிக் பைகளிலிருந்து துர்நாற்றம் வீசயதாக பொதுமக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்னின் உடல் வெட்டப்பட்டு பல பாகங்களாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தடவவியல் துறையினரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இசாமர் துண்டு துண்டாக வெட்டப்பட்டதை கண்டறிந்தனர். இசாமர் இறந்ததை அறிந்த மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : சிங்கத்தை நேருக்கு நேராக எதிர்த்து இளம் பெண் செய்த செயல்! அதிர வைக்கும் வீடியோ..!

அப்போது மாணவியர் கூறுகையில், “இசாமர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் பாதுகாப்பு குறைபாடட்டால் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. இது எங்களை பெரிதும் பாதித்துள்ளது. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினர்.

குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...