சன் டிவியில் ஒளிப்பரபாகிக் கொண்டிருக்கும் நாயகி சீரியல் நேற்று நடந்த எபிசோடால் ரசிகர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சன் டிவி என்றாலே மக்கள் மத்தியில் பிரபலம் தான், அதிலும்ப்ரைம் டைம் என சொல்லப் படும் இரவு(7-10) தினமும் 8 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் நாயகி சீரியலை பற்றி பார்வையாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் தெய்வ மகள் சீரியல் மக்கள் மத்தியில் பயங்கர ரீச்சான சீரியல்களுள் ஒன்று என்றே சொல்லலாம்.

அந்த வகையில் தெய்வ மகள் சீரியல் முடிந்த பின்னர் நாயகி என்னும் சீரியல் தொடங்கி 1 1/2 வருடங்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருகின்றது.

அதிலும் குறிப்பாக நேற்றைய எபிசோடில் அந்த சீரியல் நடியாக வளம் வரும் ஆனந்திக்கும் வில்லியாக வரும் அனன்யாவிற்க்கும் ஒரே நேரத்தில் பிரசவம் ஆவதுப் போல் காட்டப் பட்டுள்ளது.

இதையும் படிங்க – சினேகாவின் பிரசவ வலி பார்த்து தலைசுற்றிவிட்டது: மனம் திறந்த கணவர் பிரசன்னா

இதில் இரு குழந்தைக்குமே ஒரே தந்தைதான், அதிலும் வில்லி சிறையிலும் கதா நாயகி சிறந்த மருத்துவமணையிலும் பேறு பெருகிறார்கள்.

மேலும் முதல் நாள் குழந்தை பிறந்து அடுத்த நாளே அந்த குழந்தை ஸ்கூலுக்கு செல்வதுப் போல் இயக்குனர் அதை காட்டிருப்பார்.

அதன் பின் ரசிகர்கள் இயக்குனரையும் விட்டு வைக்க வில்லை அவரை பற்றியும் பல கருத்துக்களை பதிவேற்றிருக்கிறார்கள்.

அவங்க அந்த சீரியலை வெச்சி செஞ்சத நீங்களே பாருங்களேன்!

Loading...