மார்பகம் என்பது நமது உடலில் உள்ள ஒரு அங்கம் என்றும், அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளியே பேச யாரும் கூச்சப்பட வேண்டியதில்லை என்றும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலைய வளாகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவர் சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதையும் படிங்க : கவினை பிக்பாஸ் வீட்டில் அறைந்த நபரை நினைவிருக்கிறதா? அவர் லாஸ்லியா குறித்து போட்ட பரபரப்பு பதிவு

அவர் கூறியதாவது மார்பகம் உடலின் ஓர் அங்கம் தான். அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கூச்சப்படாமல் தாய், மற்றும் சகோதரியிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். புற்று நோய் குணப்படுத்த கூடிய நோய் தான்

நாம் மார்பகம் என்றாலே அதைப் பற்றி பேசக் கூடாது என்ற மன நிலையுடன் இருந்து வந்துள்ளோம்.

ஆண்களுக்கு எப்படி உடலில் சில பாகங்கள் இருக்கிறதோ, அதே போல் பெண்களுக்கு மார்பகம் என்பது உடலின் ஓர் அங்கம் தான்’ என்று வரலட்சுமி கூறினார்.

Loading...