தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான பிரசன்னாவும்- சினேகாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறியதையடுத்து, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

சினேகா தற்போது இரண்டாம் முறையாக கருத்தரித்து உள்ள நிலையில் மனைவியின் முதல் பிரசவம் குறித்து பிரசன்னா பேசியுள்ளார்.

சினேகா மிகவும் எளிமையானவர், பெரியவர்களை மதிக்ககூடியவர். இந்த பண்புகளே அவர் மீது எனக்கு காதல் வயப்பட காரணம் என பிரசன்னா கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பிரசன்னா- சிநேகா ஜோடி கலந்துகொண்டனர். நாங்கள் இருவரும் சந்தித்து 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது என தங்களது காதல் வாழ்க்கை பற்றி பகிர்ந்துகொண்டனர்.

இதையும் படிங்க : திருமணத்திற்கு முன் கர்ப்பம்! பணத்துக்காக 38 வயது பெண்ணை மணந்த 23 வயது காதலன்

எங்கள் மகன் விஹான் வந்தபிறகு, காதல் அதிகரித்துவிட்டது. தங்கள் இருவரையும் சேர்ந்து அமரவிடாமல் விஹான் எப்பொழுதுமே நடுவில் வந்து அமர்ந்துவிடுவான்.

சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அனைத்து பெண்கள் மீதான மரியாதை அதிகரித்ததாக பிரசன்னா தெரிவித்துள்ளார்

பிரசவ வலியை பார்த்ததற்கே எனக்கு பயமாக இருந்தது. சினேகாவுக்கு இயற்கையாக பிரசவம் ஆகவில்லை. அதனால் வலியை அதிகரிக்க ஊசி போட்டார்கள். அதுவரை சினேகாவை பிடித்து ஆறுதல் கூறிய நான், மருத்துவர் பெரிய ஊசியை எடுத்ததை பார்த்து எனக்கு தலைசுற்றிவிட்டது.

நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டேன். தலைவலி வரும்போது எல்லாம் இதை தான் நினைப்பேன். தலைவலியையே தாங்க முடியவில்லை என்றால் அந்த வலி எப்படி இருக்கும். ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை என்று கூறியுள்ளார்.

Loading...