உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே சென்று சிங்கத்தை சீண்டிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்காவில் சிங்கத்தை பார்வையிட பார்வையாளர்கள் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று ஒரு பெண் பாதுகாப்பு வளையத்தை தாண்டி திடீரென உள்ளே குதித்து சிங்கத்தின் அருகில் சென்றார். அருகில் இருந்த மக்கள் பதறிப்போய் கத்தினர்.

அதையும் பொருட்படுத்தாமல், அந்த பெண் மேலும் உள்ளே சென்று சிங்கத்தை சீண்டியது பரபரப்பை ஏற்பத்தியது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மார்பகம் பற்றி பேசுவதற்கு கூச்சப்பட வேண்டாம்.. பிரபல நடிகை ஓபன்டாக்..!

இந்த பெண்ணின் செயல் சட்ட விரோதமானது, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பெண் யார் என்பதும் தேடப்பட்டுவருகிறது.

Loading...