கடந்த வாரம் முழுவதும் இணையத்தில் வைரலாக பரவிய வீடியோ இதுதான்.தவறான பாதையில் வந்த பேருந்தை மறித்து தைரியமாக எதிர்த்து நிற்பது போன்று அமையும் அந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலானது.

கேரளாவின் பெரும்பாவூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில், அரசு பஸ் வந்துள்ளது. சாலைவிதிகளை மீறியபடி எதிர்புறத்தில் பஸ் வருவதை டூவீலரில் வந்த ஒரு பெண் பார்த்தார்.இதைப்பார்த்து மற்ற வாகன ஓட்டிகளை முந்திச்சென்று அந்த பேருந்தை மறித்துநின்றார்.பேருந்து டிரைவர் செய்வதறியாது திகைத்தார்.

ஆனால் தற்போதுதான் அதற்க்கான உண்மைக்காரணம் வெளிவந்துள்ளது.அந்தப்பெண்ணே அந்த டிரைவரை திட்டாதீங்க என கூறியுள்ளது.இப்படி வீடியோ வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் டிரைவருக்கு சவால் விடுவதற்காக அப்படி நிற்கவில்லை.

அந்த வீடியோவில் கடைசி நேர காட்சிதான் இருந்தது. ஆனால், நான் அப்படி பஸ் முன்னாடி நிற்க ஒரு காரணம் இருந்தது. அந்த ரோட்டில் எனக்கு முன்னாடி ஒரு ஸ்கூல் பஸ் சென்று கொண்டிருந்தது. நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, எனக்கு முன்னால் ஒரு ஸ்கூல் பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பஸ் இடது புறம் சென்று நின்றது.

அந்த நேரத்தில் பள்ளி பேருந்து திரும்பியபோது, நான் சென்ற சாலையில் எதிரே அரசு பஸ் ஒன்று இன்னொரு வண்டியை ஓவர்டேக் செய்து கொண்டு வந்தது. அப்போது அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே ஷாக் ஆகி நின்றேன். அந்த பஸ் வந்த வேகத்துக்கு எனக்கு என்ன வேணும்னாலும் ஆகியிருக்கலாம்.

ஆனால் அந்த பஸ் டிரைவரால்தான் நான் உயிர் தப்பினேன். அவரை திட்டாதீங்க. அவர்தான் பஸ் வேகத்தை உடனே குறைத்து வலது புறமாக திருப்பி சென்றார். அப்பறம்தான் எனக்கு பயமே போச்சு. 7 வருஷமா வண்டி ஓட்டுறேன். இப்படியெல்லாம் இதற்கு முன்பு எனக்கு நடந்ததே இல்லை” என்றார்.

Loading...