தங்களது சொந்த தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி பலியான நபரை பாபநாச பட பாணியில் மறைத்து தோட்டத்தில் புதைத்த குடும்பத்தினரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிவகிரி அருகே மன்னர்(39 ) என்ற விவசாயியை காணவில்லை என்று 2012ஆம் ஆண்டு அவரது மனைவி மேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். பின் 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆழ்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநெல்வேலி குற்றபிரிவு குற்ற புலனாய்வு துறைக்கு வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், மன்னர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அப்பகுதியில் இருந்த பன்னீர் செல்வம் என்பவர் தோட்டத்தில் விலங்குகள் புகாமல் இருக்க, அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து தோட்டத்தின் உரிமையாளரான பன்னீர் செல்வம், அவரது மனைவி பாப்பா மருமகன் பாலகுரு ஆகியோர் அதை மறைப்பதற்காக அவர்களது சொந்த தோட்டத்திலேயே புதைத்துவிட்டு ஊருக்குள் அவர்களே பரிதாப படுவதுபோல் நாடகமாடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே பன்னீர் செல்வம் கடந்த ஆண்டு உடலநலகுறைவால் இறந்துள்ளார். எனவே பொலிசார் அவரது மனைவி பாப்பா மற்றும் மருமகன் பாலகுரு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Loading...